Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடைந்ததா கூட்டணி? தனித்து களமிறங்கிய பாஜக – அண்ணாமலை திடீர் அறிவிப்பு!

Advertiesment
உடைந்ததா கூட்டணி? தனித்து களமிறங்கிய பாஜக – அண்ணாமலை திடீர் அறிவிப்பு!
, திங்கள், 31 ஜனவரி 2022 (13:36 IST)
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியான பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்று செல்வாக்கை காட்ட வேண்டியுள்ளது. அதேசமயம் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கும் தொகுதியை பங்கிடுவதில் சிரமங்கள் உள்ளன. நாங்கள் அதிமுகவினரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் போதிய இடங்கள் கிடைக்கவில்லை. என்றாலும் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் பாஜக இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் அதிமுக – பாஜக இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை.

எப்போதும்போல அதிமுக – பாஜக உறவு சுமூகமாகவே உள்ளது. அதிமுக தலைவர்கள் மீது பாஜகவுக்கு எந்த விதமான மன வருத்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் 2022 - தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?