ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் தான் என்றும் இதை நான் அதிமுகவினர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதற்கு சசிகலா மற்றும் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.
அண்ணாமலையை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்பதில் அதிமுகவுக்கு யாரேனும் சந்தேகம் இருந்தால் அவர்களுடன் விவாதிக்க தயார் என்று தெரிவித்தார்.
1995ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது, அதில் இந்துத்துவா என்றால் என்ன என்பது பற்றிய வழக்கின் ஆதாரங்கள் உள்ளன. அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும், ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்னையில் தகர்க்கப்பட்ட போது அதனை கட்டிக் கொடுப்பதாக சொன்னவர் தான் ஜெயலலிதா, இப்போது சொல்லுங்கள் அவரை இந்துத்துவா என்று சொல்வதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.