ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி 14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று
அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஜனவரி 16 ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகிஉள்ளது
ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்ற இருப்பதால் அந்த உரையை கேட்க ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்றும், அன்றைய தினம் மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்ட கல்வி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பரபரப்பான செய்தி பரவி வருகிறது. இந்த உத்தரவால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது