Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனிக்கட்சி ஆரம்பித்த ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில்? தேர்தலில் போட்டியா?

Advertiesment
தனிக்கட்சி ஆரம்பித்த ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில்? தேர்தலில் போட்டியா?

Siva

, திங்கள், 25 மார்ச் 2024 (13:50 IST)
பாஜகவில் பல ஆண்டுகள் இருந்த ஜனார்த்தன ரெட்டி திடீரென கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்த நிலையில் தற்போது மீண்டும் அவர் பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
பாஜகவில் அத்வானி இருந்த போதே அவருடன் ரத யாத்திரையில் கலந்து கொண்டவர் ஜனார்த்தன ரெட்டி. இவர் முன்னாள் டெல்லி முதல்வர்  சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பாஜக முதல்வராக எடியூரப்பா கர்நாடகாவில் பதவி ஏற்றபோது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றார் ஜனார்த்தன ரெட்டி. அதன் பின்னர் இவர் மீது பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென பாஜகவில் இருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற தனிக்கட்சியை தொடங்கினார் 
 
இந்த கட்சியை அவர் சில ஆண்டுகள் மட்டுமே நடத்தி வந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் அவர் பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரே நாளில் அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது
 
இருப்பினும் அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேராசிரியர் பணிக்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.1000 உயர்வு: அன்புமணி கண்டனம்