சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள ஏழு முக்கிய சாலைகளை அகலப்படுத்த படுவதால் அந்த சாலையில் உள்ள பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஏழு முக்கிய சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சாலையின் இரு புறங்களிலும் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பழமையான கட்டிடங்கள் மற்றும் மிக உயர்ந்த மரங்கள் இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எந்த பகுதிகளில் உள்ள எந்தெந்த கட்டிடங்களில் இடிக்கப்படும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது