Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரங்களில் விளம்பரம் செய்தால் சிறை, அபராதம் ! - சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

மரங்களில் விளம்பரம் செய்தால்  சிறை, அபராதம் ! -  சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
, ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (13:20 IST)
சுற்றுச் சூழலைப் பாதுக்காக்கும் பொருட்டும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த ஜனவரி மாதல் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், மரங்களில் ஆணி அடிப்பது, கம்பியால் மரங்களைக் கட்டுவது, விளம்பரப்பலகைகள் வைப்பது போன்ற செயல்களால் பட்டுப்போகின்றன. எனவே இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுகும், நிறுவனங்களுக்கும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இன்று, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர்,  ’மரங்களுக்கு எந்தவிதமான சேதாரம் இன்றி அவைகளைப் பாதுக்காக்க வேண்டியது மக்களின் கடமை. எனவே மரங்களில் ஆணி அடித்தல் பெயிண்ட் அடித்தல், போன்ற செயல்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
தனியார் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
 
சென்னை மாநகராட்சியில் உள்ள மரங்களில் விளம்பரம் செய்தால் ரூ. 25,000 அபராதம்., 3 ஆண்டு சிறைத்தண்டனை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகளை, மரங்களில் கட்டியுள்ள கம்பிகள் ஆகியவற்றை இன்னும் 10 நாட்களுக்கும் அப்புறப்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தையின் காலில் விழுந்த கவர்னர் தமிழிசை... கட்சி பேதம் கடந்த பாசம்!