சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த குடோனியில் தற்போது அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும், அவரிடம் இருந்து சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் குடோன் அமைத்து உலகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தும் அளவுக்கு ஜாபர் சாதிக் செல்வாக்கு இருந்திருக்கிறார் என்றால் அவருடைய பின்னணியில் உள்ள சக்தி மிகுந்த நபர்கள் யார் யார் என்பதை கண்டுபிடிப்பதில் போதை பிரிவு தடுப்பு அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது