மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்துள்ளது என்பது தெரிந்ததே. அந்த அவசர சட்டத்தில் "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'வேதா நிலையம்' இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் எனவும், இதையடுத்து, அந்த இல்லத்ம் கையகப்படுத்தப்படும் என்றும், அந்த நிலம் மற்றும் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம்' இல்லத்தை நினைவில்லமாக மாற்ற புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை' அமைக்கப்படும் என்றும், இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வர், துணை முதல்வர், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவிடமாக ஜெ.தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாகவும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் ஜெ.தீபா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.