Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (12:48 IST)
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
தமிழகத்தில் தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பியது. காவிரி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
 
நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சென்னையில் பல இடங்களில் நேற்று இரவு மழை பெயதது.
 
இந்நிலையில், தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவமழை, வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில், வடமேற்ற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. மேலும், வழிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments