பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கழுத்தில் தங்கள் அடையாள அட்டையை அணிந்தே பணிபுரிகின்றனர். ஆனால் அரசு ஊழியர்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அவர்கள் அடையாள அட்டை அணிவதில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணி நேரத்தில் அடையாள அட்டையை ஊழியர்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள் பலர் நடமாடி வருவதால் அவர்களிடம் பொதுமக்கள் ஏமாந்து வருவதாகவும், அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் இந்த குழப்பம் வர வாய்ப்பு இல்லை என்றும் சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.