செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. ஐடி ஊழியரின் மனைவி, மகள் பலி..!

Siva
திங்கள், 8 ஜூலை 2024 (08:45 IST)
செங்கல்பட்டு அருகே நடந்த பயங்கர விபத்தில் ஐடி ஊழியரின் மனைவி மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக வெளியாகி இருக்கும் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழவேலி என்ற பகுதியில் வந்த போது திடீரென ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது பின்னால் வந்த லாரி ஒன்றும் இவர்களது கார் மீது மோதியதோடு, அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதின. இந்த விபத்தில் சுதர்சன் மற்றும்  அவரது மகள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவி ரஞ்சனி மற்றும் மகள் மனஸ்வினி ஆஜுட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் பலியானவர்களின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக போக்குவரத்து போலீசார் நிலைமையை சரி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments