சென்னையில் ஏசி பேருந்து நடு சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லும் 109 சி என்ற அரசு ஏசி பேருந்து அடையாறு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்தது. முதலில் இந்த பேருந்தில் இருந்து புகை வந்ததை அடுத்து உடனடியாக டிரைவர் பேருந்து நிறுத்தினார். அதை அடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவசர அவசரமாக இறங்க தொடங்கினர்.
பயணிகள் அனைவரும் இறங்கிய சற்று சற்று நேரத்தில் பேருந்து திடீரென எரிய தொடங்கியது. இதை அடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து எரிவதற்கு முன்பே புகை ஏற்பட்டதால் பயணிகள் சுதாரித்து வெளியேறினார்கள் என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.