Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது மேக் இன் இந்தியா அல்ல.. மேட் இன் இந்தியாவைப் பற்றியது!

இது மேக் இன் இந்தியா அல்ல.. மேட் இன் இந்தியாவைப் பற்றியது!

இது மேக் இன் இந்தியா அல்ல.. மேட் இன் இந்தியாவைப் பற்றியது!
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (09:44 IST)
இன்று உலகின் தொழில் நுட்பம் உச்சானிக் கொம்பில் இருந்தாலும் இன்று வரை நம் பண்டங்களின் மருத்துவ குணத்திற்கும், ருசிக்கும் ஈடான பண்டங்கள் உலகில் எங்கும் இல்லை என்பதை சற்று உறுதியாகவே கூறலாம்.


 
 
நம்ம ஊர் தேங்கா மிட்டாய் தான் இன்று எகிப்தியரின் மிகச் சிறந்த இனிப்பு பண்டம். அது மட்டும் அல்ல அது எகிப்திய பண்டமாக அமெரிக்கா வரை சந்தைப்படுத்தப்படுகிறது.  உலகமே இனிப்பிற்காகத்  தேனைப் பயன்படுத்தி வந்த காலத்தில் உலகின் மனிதத் தயாரிப்பில் உருவான முதல் இனிப்பாக கருப்பட்டியைச்  செய்தவர் நம் முன்னோர்களே.
 
இத்தகைய சீரிய உணவுக்கு கலாச்சாரம் கொண்ட நாம் இதனை விடுத்து வெளி உலகில் இருந்து சந்தைப்படுத்தப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடி ஓடும் நிலையின் அவலத்தை எண்ணிய ஓர் இளைஞனின் கோப வெளிப்பாடே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையம்.
 
பிட்ஸ்ஸா, பர்கர் சந்தைப்படுத்துவதைப் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் பண்டங்களை குறைந்தபட்சம் நம்ம ஊர் மக்களின்  கைகளிலாவது கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான சிந்தனையே இந்த அசாத்திய முயற்சி.
 
கருப்பட்டி மைசூர்பாக், இலந்தை அடை முதல் தேன் மிட்டாய் வரை ஒரே இடத்தில் வாங்கி ருசிக்கலாம். அதுவும் ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பிற்கு உண்டான இடத்தில் இருந்து வருவது இன்னும் சிறப்பு. நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்தால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கைகளில் டெலிவரி செய்யப்படுகிறது.
 
கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருந்த மணல்மேடு முறுக்கு இன்று இவர்களின் வரவால் புத்துயிர் பெற்றிருக்கிறது. இப்படி நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களைத் தேடித் தேடிச் சேர்த்து அவற்றின் இருப்பை உறுதி செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, லண்டன், அமீரகம், சிங்கப்பூர் என அனைத்து நாடுகளுக்கும் ஐந்தே நாட்களில் டெலிவரி செய்கின்றனர்.
 
நம்ம ஊர் பாரம்பரிய ருசியினை சுவைக்க நேட்டிவ்ஸ்பெஷலை.காம் (https://nativespecial.com) இணையத்தைச் சொடுக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டா: குஜராத்தில் அறிமுகம்