குஜராத் மாநிலத்தில் எம்பிக்கள் கட்சி மாறி ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாத நோட்டா முதன்முதலில் ராஜ்யசபா தேர்தலில் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பிக்களை பாஜக ரூ.15 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாக வெளிவந்த செய்தியின் காரணமாக காங்கிரஸ் எம்பிக்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் 2013 ஆம் ஆண்டில் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி நோட்டா வாய்ப்பு வாக்குச் சீட்டுகளில் இடம் பெற்றிருக்கும் என்று பேரவைச் செயலர் டி எம் படேல் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மோத்வாதியா கூறும்போது, 'நோட்டாவிற்கு வாக்களிக்கும் எங்கள் கட்சியின் வேட்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்” என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர்களும், காங்கிரஸ் சார்பில் சோனியாவின் நம்பிக்கைக்குரிய அகமது படேலும் போட்டியிடுகிறார்.