Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகாரிகளுக்கு கிடைத்த புதிய தகவல் - சரத்குமார் வீட்டில் மீண்டும் சோதனை

அதிகாரிகளுக்கு கிடைத்த புதிய தகவல் - சரத்குமார் வீட்டில் மீண்டும் சோதனை
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (19:05 IST)
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் வீட்டில் இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.


 

 
நடைபெற இருந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஏராளமான பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு பல புகார்கள் வந்தன. அதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  
 
அப்போது விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும், அவரது உறவினர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.  அதேபோல், சரத்குமார் விட்டிலிருந்தும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  
 
அதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், சரத்குமார் மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது. 
 
முக்கியமாக சரத்குமாரிடம் நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அவரிடம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவரின் மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் தற்போது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் ராடன் நிறுவனத்தில் இன்று பிற்பகல் சென்ற அதிகாரிகள் அங்கு தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
 
இதுபோக, வருமான வரித்துறை அதிகாரிகள் சில புதிய தகவல்கள் கிடைத்தன் பேரில், சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள சரத்குமாரின் விட்டில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என தகவல் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை அறைந்த போலீஸ்; வைரல் வீடியோ