Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மணி நேர கிடுக்குபிடி விசாரணை... விஜய்யின் பனையூர் வீட்டில் நடப்பது என்ன?

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (16:08 IST)
விஜய்யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
 
ஒரே இரவில் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. 18 மணி நேரமாக பனையூர் வீட்டில் இன்னமும் நீடிக்கும் இந்த விசாரணையில் விஜய்யின் வங்கி கணக்குகள், அவரின் சம்பளம் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பிகில் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால், உண்மையில் அவரது சம்பளம் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், விஜய்யிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments