"வேர்ல்ட் பேமஸ் லவ்வர்" விஜய் தேவரகொண்டாவின் ட்ரைலர் ரிலீஸ்...!

வியாழன், 6 பிப்ரவரி 2020 (16:06 IST)
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகரான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து நோட்டா , டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து  சூப்பர் ஹிட் கொடுத்து கலெக்ஷனில் கல்லா கட்ட செய்தார். 
 
தற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக  நடித்துள்ளனர்.  கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார் 
 
கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ்  தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  அதையடுத்து வெளிவந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வித்யாசமான கருப்பு புடவையில் சூப்பர் லுக் போஸ் கொடுத்த சமந்தா!