வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலையை மையம் எச்சரித்துள்ளது.
	
	
	 
	கடந்த வடகிழக்கு பருவமழையும் இயல்பான அளவான விட குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் பல இடங்களிலும் தற்போது வெயில் துவங்கிவிட்டது. அந்நிலையில், இலங்கை-கன்னியாகுமாரி கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. 
	 
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
	 
	இதன் காரணமாகவே வருகிற 15ம் தேதி வரைக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.