Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி கட்சியுடன் திமுக கூட்டணியா? முக ஸ்டாலின் பேட்டி

ரஜினி கட்சியுடன் திமுக கூட்டணியா? முக ஸ்டாலின் பேட்டி
, திங்கள், 7 டிசம்பர் 2020 (13:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அரசியல் வருகையை உறுதி செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்ட நிலையில் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட தமிழருவி மணியன் பேட்டியளித்தார்
 
அப்போது அவர் ’அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் ஒருபோதும் ரஜினிகாந்த் கூட்டணி வைக்க மாட்டார் என்றும் அப்படி ஒரு தவறை செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார் என்றும் கூறினார் 
 
தமிழருவி மணியனின் இந்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களிடம் இன்று கேட்டபோது ’திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என ரஜினி சொன்னதாக எனக்கு இதுவரை தகவல் வரவில்லை. அதுமட்டுமின்றி தமிழருவி மணியன் போன்றோர்களை தவறாக அருகில் வைத்து கொண்டு விட்டோமே என ரஜினி சொன்னதாகத் தான் எனக்கு தகவல் வந்துள்ளது என்று கூறினார்
 
அப்படியெனில் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள திமுக தயாராக இருப்பதாக மறைமுகமாக முகஸ்டாலின் கூறியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு பட்டம் குடுத்ததுக்கு தேங்க்ஸ்..! இந்தாங்க உங்களுக்கு ஒன்னு! – எடப்பாடியாரை பங்கம் செய்த ஸ்டாலின்!