Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேயர் மீது ஊழல் குற்றசாட்டு வைப்பது சரியல்ல - அமைச்சர் முத்துச்சாமி!

மேயர் மீது ஊழல் குற்றசாட்டு வைப்பது சரியல்ல - அமைச்சர் முத்துச்சாமி!

J.Durai

, வெள்ளி, 12 ஜூலை 2024 (20:25 IST)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். 
 
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்...
 
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மேலும்  இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தின்
கீழ் 5.11 கோடி மதிப்பில்
1048 பயனாளர்களுக்கு பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 
 
மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்றிலிருந்து 66 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் 218 கிராம பஞ்சாயத்துக்களில் இம்முகாம்களில் நடத்தபட உள்ளதாகவும் 15 துறைகள் இதில் பங்கேற்கும் எனவும் 44 விதமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்கலாம் எனவும் 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
 
அவிநாசி மேம்பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும் என தெரிவித்தார். டெட்ரா பாட்டில் குறித்தான கேள்விக்கு நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு இருப்பதாகவும் அதை எல்லாம் பார்த்த பின்பு தான் நடவடிக்கைகள் கொடுக்க வேண்டும் பிறகு தான் முடிவை கூற முடியும் என பதிலளித்தார். 
 
கள்ளு கடை திறப்பது குறித்து பல்வேறு கோரிக்கைகள் வருவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அது மிகப்பெரிய பாலிசியான முடிவு எனவும் அது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் அதன் பிறகு தான் பதிலளிக்க முடியும் என தெரிவித்தார்.
 
மேலும் கள்ளுக்கடை திறப்பது என்பது நீண்ட நாள் கோரிக்கை தானே என கேள்வி எழுப்பிய அவர் ஏன் இத்தனை நாட்களாக அதனை செய்யவில்லை என்று நானும் கேள்வி எழுப்பலாம் தானே தெரிவித்த அமைச்சர் இருக்கின்ற பிரச்சினைகளை ஆய்வு செய்த பிறகு அதன் பின்பு தான் முடிவுக்கு வர முடியும் என கூறினார்.
 
கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது சரியானது அல்ல என தெரிவித்தார். 
 
மேலும் அரசு மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து செய்வதற்கு சில இடையூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிய அவர் வாட்ஸ் அப் யில் எதும் தகவல்கள் வந்தாலும் தங்களது சென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார்.டாஸ்மாக்கில் பில்லிங் யில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து வருவதாகவும் இனிமேல் அந்த பில்லிங் சிஸ்டம் ஒழுங்காக நடைபெறும் என தெரிவித்தார். மேலும் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மனுவை விற்பனை செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். FL2 பார்களுக்கு அதிகமாக அனுமதி  அளிக்கப்படவில்லை எனவும் வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கமும் இல்லை என தெரிவித்த அவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
கோவை மாநகராட்சியில் சில இடங்களில் மாசு கலந்த குடிநீர் வருவதாக புகார்கள் வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.ஒரு காலத்தில் மது கடைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் எனவும் ஆனால் மதுவை பயன்படுத்துபவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
 
நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்த அவர் படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும் எனவும் கடையை மூடிவிட்டால் மட்டும் எதுவும் நடந்து விடாது மது அருந்துபவர்களை அதற்கு தயார் செய்ய வேண்டும் என அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 
 
விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை பொதுமக்கள் திமுக பக்கமும் முதலமைச்சர் பக்கமும் முழுமையாக நிற்பதை நேரடியாக பார்க்க முடிவதாகவும் மாபெரும் வெற்றியை பொதுமக்கள் அளிப்பார்கள் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார்களோ அதே போன்று விக்கிரவாண்டிலும் கொடுப்பார்கள் என தெரிவித்த அவர் அதற்கு காரணம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முதலமைச்சர் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கை எனவும் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய ஆதரவை தங்களால் காண முடிவதாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றிரவு 10 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!