Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்வதே நல்லது! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Advertiesment
Anbumani Ramadoss

Prasanth Karthick

, செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:39 IST)

தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் ஆங்காங்கே நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நாய்களை பிடித்துக் கொன்றுவிடுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், அவ்வாறு கொலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

 

அதற்கு பதிலாக நாய்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கருத்தடை சிகிச்சைகளை செய்துவிடுவது என்று திட்டமிடப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் அனைத்து நாய்களையும் பிடித்து கருத்தடை செய்வது இயலாத காரியமாகவே உள்ளது. பல பகுதிகளில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் பிற நாய்களை கடிப்பதாலும், மனிதர்களை கடிப்பதாலும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.

 

இதுகுறித்து பேசியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாட்களை கருணைக் கொளை செய்வதே சரியான தீர்வாக அமையும். தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் நாய்க்கடியும் ஒன்றாக மாறியுள்ளது. மக்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?