Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஆட்சியில் இருந்திருந்தா அறுத்து விட்ருப்பேன்! - வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

Advertiesment
நான் ஆட்சியில் இருந்திருந்தா அறுத்து விட்ருப்பேன்! - வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

Prasanth Karthick

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (08:58 IST)

தமிழ்நாட்டில் பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஆதங்கத்துடன் பேசிய அன்புமணி ராமதாஸ், தான் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என பேசியுள்ளார்.

 

தமிழகத்தில் கடந்த சில காலமாக பள்ளி, கல்லூரிகளில் பெண்கள், சிறுமியருக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது எதிர்கட்சிகளின் கண்டத்திற்கு உள்ளாகி வருகிறது.

 

இந்நிலையில் ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணி சென்றார். அங்கு ரயில் நிலையம் அருகே பாமக கொடியை ஏற்றி வைத்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்லவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை, கல்லூரி மாணவியை 8 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்வது போன்ற தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நான் ஆட்சியில் இருந்திருந்தால் குற்றவாளிகளை வேறு மாதிரி செய்திருப்பேன். அந்த மிருகங்களை வெட்டிவிடுவோம். அப்போதுதான் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவே ஒரு பயம் ஏற்படும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் ஆதரவு தறாங்க! அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை! - ஜி.கே.வாசன் அறிவிப்பு!