இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த 10 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில் இன்று 11 வது நாளாக போர் நீடிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளன.
வான்வழி தாக்குதல் மட்டுமின்றி தரைவழி மற்றும் நீர் வழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கியுள்ளதை அடுத்து ஹமாஸ் அமைப்பு நிலை குலைந்து போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இஸ்ரேலின் நோக்கம் ஹமாஸ் அமைப்பை அழிப்பது மட்டுமின்றி காசாவையும் கைப்பற்ற வேண்டும் என்று இருப்பதை அடுத்து உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா அதிபர் ஜோ படைன், காசாவை இஸ்ரேல் கைப்பற்ற கூடாது என அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் நாளை அமெரிக்க அதிபர் ஜோ படைன் இஸ்ரேல் பயணம் செய்ய உள்ளதாகவும் காசாவை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என இஸ்ரேலுக்கு அவர் நேரில் அறிவுறுத்தல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது