Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்சி மாறும் அடுத்த பல்க் விக்கெட்!! அதிமுக இருக்கட்டும் அமமுகவை மீட்பாரா தினகரன்?

Advertiesment
கட்சி மாறும் அடுத்த பல்க் விக்கெட்!! அதிமுக இருக்கட்டும் அமமுகவை மீட்பாரா தினகரன்?
, வியாழன், 6 ஜூன் 2019 (08:39 IST)
தினகரனின் அமமுக கட்சியில் இருந்து முக்கிய நபரான இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு பேரிடியாக வந்து விழுந்தது.  
 
தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்த தேர்தல் முடிவு டிடிவி தினகரனை தமிழக மக்கள் அங்கீகரிக்க வில்லை என்பதையே காட்டுகிறது. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
webdunia
இந்நிலையில், தற்போதைய தகவலின்படி இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிகிறது. தென் சென்னையில் அமமுக சார்பில் போட்டியிட்டவர்தான் இசக்கி சுப்பையா. இவர் கட்சியின் மிக முக்கிய நபர், அதாவது கிட்டத்தட்ட தங்க தமிழ்செல்வன் போல தினகரனிடம் நெருக்கமானவராம். 
 
தேர்தலுக்கு முன்னர் அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் இடம் இப்போது இசக்கி சுப்பையாவுக்குதான், அவர் அவ்வளவு முக்கியமான நபர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
webdunia
ஏற்கனவே தங்க தமிழ்செல்வனின் வலது கரமாக திகழ்ந்த அருண் குமார் தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இருந்து விலகி துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துவிட்டார். 
 
அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 15 அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பனும் ஒருவர். 
 
இவ்வாறு கட்சியை விட்டு முக்கிய நபர்கள் எல்லாம் விலகிக்கொண்டே இருந்தால், தினகரன் முதலில் அதிமுகவை மீட்டு எடுக்கும் பணியை நிறுத்திவிட்டு அமமுகவைதான் மீட்டு எடுக்கனும் போல...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 610 கட்சிகளுக்கு ஜீரோ: தேர்தல் ஆணையம் அறிவிப்பு