Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ச்சைக்குரிய கருத்து: பெண் சாமியாருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் கண்டனம்

Advertiesment
சர்ச்சைக்குரிய கருத்து: பெண் சாமியாருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் கண்டனம்
, வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (16:53 IST)
கடந்த  2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்டிராவின் மாலேகான் என்ற பகுதியில் உள்ள மசூதி அருகே  வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இதன் முக்கியக் குற்றவாளியாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவரை மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் சாத்வி பிரக்யா கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த வீரர் ஹேமந்த் கார்கரே குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது
 
webdunia
இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளரும் பெண் சாமியாருமான சாத்வி பிரக்யாவின் சர்ச்சை கருத்துக்கு  ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனை பொதுச்செயலாளராக்கியது ஏன் ? தங்க தமிழ்செல்வன் பரபரப்பு தகவல்