Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் மக்கள் வாழ்வது தான் திராவிட ரோல் மாடல் ஆட்சியா ? கார்த்திகேயன் கேள்வி

bjp
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (22:27 IST)
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் வாழ்வது தான் திராவிட ரோல் மாடல் ஆட்சியா ? கரூரில் நடைபெற்ற பாஜக ஆர்பாட்டத்தில் மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் கேள்வி
 
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்கட்டணம், பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.  இதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில், கரூர், தாந்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், இலாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
 
கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய மாநகரத்தின் சார்பில் கரூர் காவல்நிலையம் அருகே ஆர்பாட்டம் மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்ட பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய மத்திய மாநகர பாஜக தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், நம்ம ஊரில் அந்த அளவிற்கு மழைநீரினால் பிரச்சினை இல்லை என்றாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் வாழ்கின்றனர். வாக்களித்த பாவத்திற்காக அப்படி வாழ்வது தான் திராவிட ரோல் மாடல் ஆட்சியா ? முதல்வருக்கும் இது தெரியும், கேள்வி கேட்ட செய்தியாளர்களையும் மிரட்டும் தோனியில் பேசிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள நம் தமிழர்களை குடிகாரர்களாக்கி அதன் மூலம் ஆட்சி செய்வது தான் இன்றைய திமுக அரசின் நிலைமை என்றும், ஆகவே மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்., வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயம் பிரதமராக மோடி ஐயா அவர்கள் மீண்டும் வருவது நிச்சயம் என்றும் ஆகவே நம் இந்தியா வல்லரசாக அவர் தான் மிகச்சிறந்த பிரதமர் என்பதனை மக்கள் உணர்ந்து விட்டனர் என்றும் கூறினார். மேலும், இந்த ஆர்பாட்டத்தில், பாஜக  மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலையில், மாவட்ட துணை தலைவர் செல்வன் மற்றும் மாவட்ட செயலாளர் டாக்டர் ரமேஷ், கரூர் மத்திய மாநகர பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு