Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் பூஜை அறையில் முருகன் படத்தை வைக்க மாட்டீங்களா? பாஜக தலைவர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி!

Advertiesment
ஏன் பூஜை அறையில் முருகன் படத்தை வைக்க மாட்டீங்களா? பாஜக தலைவர்களுக்கு நெட்டிசன்கள் கேள்வி!
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:43 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் முருகன் பற்றியும் கந்த சஷ்டி கவசம் பற்றியும் சர்ச்சையான விவாதங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இப்போது பாஜகவினர் வீடுகளில் வேல் வரைந்தும் கந்த சஷ்டி கவசம் பாடலையும் பாடியும் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக பாஜக பிரபலங்கள் தங்கள் வீட்டில் முருகன் படத்தை வைத்து வழிபடுவது போல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

ஆனால் அந்த புகைப்படங்களில் ஒன்றில் கூட முருகன் புகைப்படம் பூஜையறையில் இல்லை. சமையலறையிலும், ஹாலிலும் புகைப்படங்களை வைத்து வழிபடுவது போல புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளனர். அதனால் இதெல்லாம் செட் அப் என்றும் ஏன் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகன் படத்தை வைத்து வழிபட மாட்டீர்களா என்ற கேள்வியும் சமூகவலைதளங்களில் எழும்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர்தான் கிடைக்கல; புத்தரை முயற்சி பண்ணுவோம்! – நேபாளத்தின் அடுத்த சர்ச்சை!