மாநில கட்சியாக உள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என அருண்குமார் ஐபிஎஸ், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் எஸ்.பியாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி புதுக்கோட்டை எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில காலமாகவே நாம் தமிழர் கட்சியினருக்கும், அருண்குமாருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இதை வெளிப்படையாகவே மேடை ஒன்றில் விமர்சித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி எஸ்பி வருண்குமார் திமுக ஐடி விங் போல செயல்படுவதாக விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக அருண்குமார், நாதக நிர்வாகியான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
IPS மாநாட்டில் வருண்குமார் என்ன சொன்னார்?
இந்நிலையில் சத்தீஸ்கரில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 5வது தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் வருண்குமாரும் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழ்நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரிவினையை தூண்டும் விதத்தில் வளர்ந்து வருவதாக பேசியுள்ளார்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சி மீது தேசிய புலனாய்வு அமைப்பின் பார்வை இருக்கும் நிலையில் அவரது இந்த பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே..!
நாம் தமிழர் கட்சி கண்டனம்:
வருண்குமாரின் இந்த பேச்சு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள நாதக இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் “Dear Strict (?) Officer!
திமுகவுக்கு மூன்றாம்கட்ட அல்லக்கை வேலை பாக்குறது, ஆடியோக்களை விட்டு அற்பச் சுகம் காணுறது, மொறச்சு பாக்குற மாதிரி போட்டோ போடுறது, வாட்சப்ல ஸ்டேட்ஸ் வச்சுட்டு, அத செய்தியா போடச் சொல்லி பத்திரிக்கையாளர்கள்கிட்ட லாபி பண்றது, பிரிவினைவாத இயக்கம்ன்னு டெல்லில போய் பினாத்துறது, பொய் வழக்குப் போட்டு கைதுபண்றது, கைதுபண்றவங்கள
கண்ணகட்டிட்டு அடிச்சு சித்ரவதை பண்றதுன்னு சில்லறைத்தனமா எச்சவேலை பாக்குறத விட்டுட்டு, அரசியலுக்கு நேரடியா வாங்க Bro!
துணிவு, திராணி ஏதும் இருந்தா உங்க பதவிய ராஜினாமா பண்ணிட்டு, நேரடியா அரசியலுக்கு வாங்க..மோதுவோம்.. அதவிட்டுட்டு, கோழைத்தனமா திமுக அரசோட முதுகுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு வாய்ச்சவடால் விடாதீங்க..” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K