நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர், "சங்கி என்றால் சக தோழன் அல்லது நண்பன் என்று அர்த்தம்" என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
"திடீரென பிரதமரை காலையில் மகனும் மாலையில் தந்தையும் சந்திக்கிறார்கள். எதற்காக சந்திப்பு என்று சொல்லப்படுவதில்லை; எதைப் பற்றி பேசினார்கள் என்றும் கூறப்படுவதில்லை.
ஆனால் நான் ரஜினிகாந்தை சந்தித்தது பற்றி வெளிப்படையாக கூறுகிறேன். முதல்வருக்கும் பிரதமருக்கும் கள்ள உறவு இல்லை; நல்ல உறவே இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் எங்களை 'சங்கி' என்று சொல்கிறார்கள்.
திமுகவை எதிர்த்தாலே 'சங்கி' என்று சொல்கிறீர்கள். 'சங்கி' என்றால் நண்பன் அல்லது சக தோழன் என்றே பொருள். "எங்களையெல்லாம் 'சங்கி' என்று சொல்பவர்கள் தான் உண்மையான 'சங்கி'" என்று அவர் மற்றொரு கேள்விக்கு சீமான் பதிலளித்தார். இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.