Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சரிதானா?

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சரிதானா?
, சனி, 9 செப்டம்பர் 2017 (01:24 IST)
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. காமராஜருக்கு பின்னர் உண்மையாகவே மக்களின் நன்மைக்கு போராடும் கட்சியோ, அரசியல் தலைவர்களோ தமிழகத்தில் இல்லை என்ற நிலையில் இந்த போராட்டத்தை அரசியல் கட்சிகள் ஏன் எடுத்துள்ளன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்



 
 
மேலும் நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையா? 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சீட் ஒதுக்கியபோது கடந்த 2009 முதல் 2013 வரையிலான 5 ஆண்டுகளில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் வெறும் 177 பேர்களுக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி 2014ல் 32 மாணவர்களும், 2015ல் 35 மாணவர்களும், 2016ல் 34 மாணவர்களும் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.
 
எனவே அனிதா போன்று 10,000ல் ஒருவர் மட்டுமே அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை லட்சக்கணக்கில் செலவு செய்து டியூஷன் படித்தவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது என்பதே உண்மை. 
 
அரசு பள்ளி மாணவர்கள் நீட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அரசியல்வாதிகள் கூறும் வடிகட்டின பொய். எனவே போராட்டம் செய்வதற்கு பதிலாக நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது எப்படி என்று யோசிப்பதுதான் இப்போதைய புத்திசாலித்தனமான காரியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்ற உத்தரவை மீறக் கூடாது: கமல்ஹாசன்