இன்று பேருந்தில் பயணித்த மூதாட்டி, தனக்கு ஓசியில் கொடுக்கும் டிக்கெட் வேண்டாம் எனக் கூறிய வீடியோ வைரலான நிலையில், இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் எனத் திமுக பிரமுகர் டுவீட் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த நிலையில் நகர, உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ஓசியில்தானே பஸ்ஸில் பயணிக்கிறீர்கள் என்று பேசியது சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று, இலவச பேருந்தில் ஏறிய மூதாட்டி, ஒருவர் டிக்கெட்டிற்கு பணம் தருகிறார். அதற்கு பேருந்து நடத்துனர் இது இலவச பேருந்து என்றும், பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க தேவை இல்லை என்றும் விளக்கமளிக்கிறார்.
அதற்கு அந்த பாட்டி, தனக்கு இலவசமாக எதுவும் வேண்டாம் என்றும், டிக்கெட்டிற்கு எவ்வளவோ அந்த பணத்தை கொடுப்பேன் என்றும் அடம்பிடித்து பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இந்த நிலையில், பிரபல திமுக பிரமுகர் ராஜீவ்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில், அந்த மூதாட்டி பற்றிப் பதிவிட்டுள்ளார், அதில், கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்! என்று பதிவிட்டுள்ளார்,