Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்தநாளில் எடப்பாடியின் பதவிக்கு ஆபத்தா.? எச்சரிக்கும் அமைச்சர் ரகுபதி..!!

Advertiesment
Ragupathi

Senthil Velan

, ஞாயிறு, 12 மே 2024 (11:56 IST)
அதிமுக கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அதனை பாஜக செய்யும்‌ என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எச்சரித்துள்ளார்.
 
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் திமுக மருத்துவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறையினர் சென்றபோது உரிய சாட்சிகளுடன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே தவிர பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது என்றார்.
 
சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அழைப்புகள் தரப்படுகிறது என்றும் தகுதி அடிப்படையில் மதிப்பெண் அடிப்படையில் அவை வழங்கப்படுகிறது என்றும் ஒரு தெரிவித்தார். புதிய பாடப் பிரிவுகள் தேவைப்பட்டால் அதனை பரிசளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
 
மிகப்பெரிய வெற்றி பெற்று மூன்று ஆண்டுகள் சாதனையுடன் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்த அவர்,  நாடாளுமன்ற தேர்தல் முடிவில் 40க்கு 40க்கு வெற்றி இந்த ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசாக அமையும் என்று குறிப்பிட்டார்.
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும் என்று அவர் தெரிவித்தார். 


ஏற்கனவே ஜெயக்குமார் கூட எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் அதற்கு செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது என்றும் அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அதனை நாங்கள் செய்ய மாட்டோம் பாஜக செய்யும்‌ என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா.? தினந்தோறும் இதை செய்யுங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!