ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற அபாரமான வெற்றி அவரை ஒரு தலைவராகவே ஆக்கிவிட்டது. இதுவரை திமுக, அதிமுக என்று இருந்த தமிழக அரசியல் தற்போது தினகரனா? எடப்பாடியா? என்ற நிலைக்கு போய்விட்டது.
இந்த நிலையில் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்தபோதே, தினகரனுக்கு எடப்பாடியிடம் இருந்து தூது போனதாம். ஓபிஎஸ் வகிக்கும் துணை முதல்வர் பதவியை தினகரனுக்கு அளிக்க தயார் என்றும் உடனே இன்னொரு இணைப்பை நடத்தலாம் என்றும் கூறப்பட்டதாம்
ஆனால் தினகரனோ ‘இப்போதே என் கைவசம் 60 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். நான்தான் முதலமைச்சர். எனக்கு யாரும் துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை’ என்று கூறியதோடு, என்னால் முதலமைச்சர் ஆனவர் எனக்கே துணை முதல்வர் பதவி தருகிறாரா? என்று எக்காளமாக கேட்டதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத்திற்குள் தினகரன் சென்றவுடன் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகவே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.