ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடு உள்ளதாக பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது பாஜக பதிலளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் வழக்கு விவகாரம் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தற்போது பாஜக மறுத்துள்ளது.
இது குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறுகையில், விசாரணை அமைப்புகள் மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் செயல்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அதற்கான விளைவுகளை சந்தித்து தான் ஆகவேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அரசியல் விமர்சகர்கள் இந்த நிகழ்வை தற்போது நினைவுபடுத்தி தற்போது ப.சிதம்பரம் கைதான விவகாரத்தை முடித்து போடுவது குறிப்பிடத்தக்கது.