Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுக்கும் ஐடி விங்தான் காரணமோ?? சய்லண்ட் மோடில் தங்க தமிழ்ச்செல்வன்!!

Advertiesment
இதுக்கும் ஐடி விங்தான் காரணமோ?? சய்லண்ட் மோடில் தங்க தமிழ்ச்செல்வன்!!
, வெள்ளி, 28 ஜூன் 2019 (09:18 IST)
தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுகவில் இணைய உள்ளார் என செய்திகள் வெளியாகும் நிலையில் அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். 
 
விவரம் தெரிந்த நாள் முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இணைய விருப்பமில்லை என்றுதான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார். 
 
ஆனால் அதிமுகவில் அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதாலும், அதிமுகவில் இணைய ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் வேறு வழியின்றி திமுகவில் இணைய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
webdunia
அதோடு, தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்த பின்னர் தேனியில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவர் இதற்கு முன்னர் கூறியது போலவே அமைதி காத்து வருகிறார். ஒரு வேளை இதற்கு முன்னர் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய போகிறார் என அமமுக ஐடி விங் தகவல் பரப்பியது என கூறியது போல, இப்போது ஏதேனும் ஒரு கட்சியின் ஐடி விங் தகவல் பரப்பி இருக்குமோ??? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக 11.00 மணி, அதிமுக 11.30 மணி: என்ன நடக்க போகுது!