Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னா மூளைப்பா உனக்கு! - இணையத்தில் வைரலாகும் கேரம் போர்டு இளைஞர்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:12 IST)
திருப்பூரில் போலீஸார் ஊரட்ங்கை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்த நிலையில் அதில் ஒரு இளைஞர் செய்த செயல் வைரலாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் வெளியிடங்களில் சுற்றுவது வாடிக்கையாகியுள்ளது. இதனால் மக்களைக் கண்காணிக்க ஆங்காங்கே ட்ரோன் கேமராக்கள் மூலம் போலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் போலிஸார் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ட்ரோன் கேமரா பறக்க ஒரு மரத்தின் அடியில் கும்பலாக கேரம் போர்டு விளையாடும் கும்பல் தெறித்து ஓட ஒரு இளைஞர் மட்டும் கேரம்போர்டைத் தூக்கி தலையில் வைத்து ஓடுகிறார். ஒரு கட்டத்தில் தனது லுங்கி அவிழ்ந்து விழ அதைக் கூட பொருட்படுத்தாமல் ஓட கேமரா அவரை நெருங்கியதும் கேரம் போர்டை வைத்து முகத்தை மறைத்துக்கொள்கிறார்.

கேமரா மற்றொரு பக்கத்துக்கு திரும்ப அப்போதும் கேரம்போர்டை வைத்து முகத்தை மறைக்க பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழக்கிறது அந்த வீடியோ. ஒரு கட்டத்தில் ட்ரோன் மேலே செல்ல கேரம் போர்டையும் தூக்கிப் போட்டு வேகமாக ஓடுகிறார் அந்த இளைஞர். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments