Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் முறைகேடு..! லஞ்ச ஒழிப்பு துறைக்கு முக்கிய உத்தரவு..!

Advertiesment
highcourt

Senthil Velan

, செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:49 IST)
பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் 54.40 லட்சம் ரூபாய் அளவுக்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார் மீதான விசாரணை நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இந்திரா வீட்டு வசதித் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. 
 
இந்த திட்டத்தின் கீழ், சென்னையை அடுத்த சோழவரம் பகுதியில் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது. 

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 


வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இந்த முறைகேடு தொடர்பான புகார் மீதான விசாரணை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரூ.13.5 லட்சம்.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறக்கும் படை பறிமுதல்..