தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்டோரா அறிவித்தல் முறை இனி தேவையில்லை என தலைமை செயலர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு காலமாக ஊராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பல்வேறு அரசு அறிவிப்புகள், ஏலம், வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தண்டோரா மூலமாக தெரு தெருவாக அறிவித்தபடி செல்லும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக தலைமை செயலர் இறையன்பு, தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்ட நிலையில் இனியும் தண்டோரா போடுவது அவசியமல்ல என்றும், அறிவிப்புகளை ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் வழியாக மக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதை அனைத்து ஊராட்சி, கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.