சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி இந்தியா முழுவதும் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியையும் சேர்த்து லீக் போட்டிகள், இறுதி போட்டி என மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் நடைபெறும் ஏப்ரல் 08, 23, 28 மற்றும் மே 1, 12, 24, 26 ஆகிய தேதிகளில் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் பாரதி சாலை வழியாக வாகனங்கள் வரலாம். வாலாஜா சாலையிலிருந்து வர அனுமதியில்லை
பெல்ஸ் ரோட்டில் தற்காலிக ஒன்வேயாக மாற்றப்பட்டு பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். ஆனால் வாலாஜா, பெல்ஸ் சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை
கண்ணகி சிலை வழியாக வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலை செல்லாது. ரத்னா கபே வழியாக திருவெல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு சென்று இலக்கை அடையும்
ரத்னா கபே ஜங்சனிலிருந்து வரும் வண்டிகள் பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பில் திரும்பி பெல்ஸ் ரோடு வழியாக வாலஜா சாலை செல்லலாம். பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை செல்ல அனுமதி இல்லை
அண்ணாசில வழியாக வரும் M, T, V எழுத்துகள் கொண்ட பார்க்கிங் பாஸ் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா ரோடு சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். B & R பார்க்கிங் பாஸ் வண்டிகள் வாலஜா சாலை வழியாக அந்தந்த நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.