Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேக் மரணம் புது திருப்பம் - 8 வாரத்துக்குள் நடவடிக்கை!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (08:41 IST)
தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் மரணம் குறித்து 8 வாரத்துக்குள் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு. 
 
தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 
 
இதனைத்தொடர்ந்து மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து 8 வாரத்துக்குள் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட ஆணையம், இந்த வழக்கை முடித்து வைத்தது.
 
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். எதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது அப்போது தான் தெளிவாக தெரிய வரும். இதற்கு நடிகர் விவேக் மரணம் ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments