Publish Date: Fri, 27 Aug 2021 (10:42 IST)
Updated Date: Fri, 27 Aug 2021 (11:47 IST)
தமிழகத்துக்காக இன்று 2,35,200 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்துக்காக இன்று 2,35,200 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வருகின்றன. மாலை மாவட்டங்களுக்கு தடுப்பூசி பிரித்து அனுப்பப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசு தொகுப்பில் இருந்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.