எடப்பாடி பழனிச்சாமியை தவிர யாரை முதல்வரக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் என டிடிவி தினகரன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய விசாரணையில் முதல்வர் எடப்படி பழனிச்சாமி தரப்பு மற்றும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
திமுக பக்கம் சாய வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறு யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.