Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்: மாரி செல்வராஜ்

சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்: மாரி செல்வராஜ்
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட ஜாதி ரீதியான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். 
 
நெல்லை நாங்குநேரியில் உள்ள பள்ளியில் ஜாதி ரீதியான மோதல் காரணமாக ஒரு மாணவர் மற்றும் அவரது தங்கையை சக  மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான  மாமன்னன் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்கிறார் தனது ட்விட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறி இருப்பதாவது
 
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும் . 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி ஏன் வழங்கவில்லை: டிடிவி தினகரன் கேள்வி..!