Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் படங்களோடு கமல்ஹாசன் படம்! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:19 IST)
தேர்தல் பிரச்சாரத்தில் கடவுள் படங்களோடு கமல்ஹாசன் படத்தையும் இணைத்து பேனர் வைத்ததாக கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் அதன் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அங்கேயே தங்கியிருந்து நாள்தோறும் வாக்கு சேகரிப்பிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு வைக்கப்பட்ட விளம்பர பதாதைகளில் கடவுளர்களுடன் கமல்ஹாசனை ஒப்பிடும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை தெற்கு காவல் நிலையத்தில் சுயேட்சை வேட்பாளர் பழனி என்பவர் கமல்ஹாசன் மற்றும் மநீம நிர்வாகிகள் இருவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மாஃபியாக்களுக்கான ஆட்சியா? எச். ராஜா

அண்ணாமலை, தமிழிசை, எச் ராஜா வீடுகள் முன் போலீசார் குவிப்பு.. கைதாகிறார்களா?

எப்படியாவது கோவிலை காப்பாத்துங்க! கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய அர்ச்சகர்! - அதிர்ச்சி சம்பவம்!

மகனுக்கு சீட் கேட்ட செங்கோட்டையன்.. மறுத்த எடப்பாடி?? - மோதலுக்கு இதுதான் காரணமா?

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments