Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் இருந்து வெளியேற கட்டாயம் ஏற்பட்டது ஏன்? - பிபிசி செய்தியாளரின் கசப்பான உண்மை

சீனாவில் இருந்து வெளியேற கட்டாயம் ஏற்பட்டது ஏன்? - பிபிசி செய்தியாளரின் கசப்பான உண்மை
, ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (00:16 IST)
தாமதமானதாலும் தயார் நிலையில் இல்லாததாலும் கடைசி நிமிட தயாரிப்புகளுடன் எங்கள் குடும்பம் விமான நிலையம் வந்த போது, சாதாரண உடையில் இருந்த காவல் துறையினர்,

நாங்கள் உள்ளே சென்று பயணப் பதிவு செய்து கொள்ளும் வரை எங்களைப் பின் தொடர்ந்தனர். சீனாவில் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை மறுத்துவிட்டு, அந்த அச்சுறுத்தலை உறுதி செய்யும் வகையிலும் நடந்து கொண்டது சீனாவின் பிரசார இயந்திரம். சட்வொர்த்-க்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்ததாக எங்களுக்குத் தெரியாது என்றும் அப்படி இருந்தால், அது அவரது அவதூறுச் செய்திகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளாக இருக்கலாம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஊடகங்களைப் போலவே, கம்யூனிஸ்ட் கட்சியின் நீட்சியாக செயல்படும் நீதிமன்ற அமைப்பு இதை ஒரு தவறான மேற்கத்திய கருத்து என்று புறந்தள்ளியதன் விளைவே இந்த அறிக்கை. சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து இத்தகைய கருத்துத் தாக்குதல்களை நடத்தியது. வியாழக்கிழமை தனது தினசரி செய்தியாளர் கூட்ட மேடையில், இது பிபிசியின் "போலிச் செய்தி" என்று விமர்சித்தது.ஷின்ஜியாங்கில் ஒரு கார் ஆலையை நிறுவும் முடிவு குறித்து சீனாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடனான எங்கள் சமீபத்திய நேர்காணலில் இருந்து இது ஒரு காணொலியை வெளியிட்டு, இது "சீன மக்களின் கோபத்தைத் தூண்டும் செய்தி" என்று கருத்துருவாக்கம் செய்தது.எங்கள் செய்திகள் நீண்ட காலமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சீன மக்களில் பெரும்பான்மையினர் எங்களின் எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்க்க முடியாது. எனவே இது பொருளற்ற குற்றச்சாட்டு. இந்த நிகழ்வுகள் என் பணியை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டாலும், அயல்நாட்டு ஊடகங்கள் சீனாவை விட்டு வெளியேறுவது புதிதல்ல. யோசனைகள் மற்றும் தகவல்களுக்காக உலகளாவிய ஒரு வெளியைத் தொடர்ந்து சீனா எதிர்த்து வருவதன் ஒரு பகுதியே இது.
 
போர்க்களமாகும் ஊடகத் துறை
சீனா
பட மூலாதாரம்,EPA
உலக வர்த்தக நிறுவனம் (WTO) சீனாவைக் கொண்டு வர வலியுறுத்திய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் "பொருளாதார சுதந்திரம்தான் முழு சுதந்திர உணர்வை அளிக்கும்" என்றும் "சுதந்திரம் பழகினால், அது, ஜனநாயகத்தின் எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன," என்றும் குறிப்பிட்டார்.
 
2012 ஆம் ஆண்டில் நான் இங்கு முதன்முதலில் இங்கு பணியாற்றத் தொடங்கியபோது, சீனா பணக்கார நாடாக ஆக ஆக, அது சுதந்திரமாகவும் ஆகும் என்ற கருத்து, செய்தி பகுப்பாய்வு மற்றும் சீனாவின் கல்வி விவாதங்களில் அடிக்கடி ஒலித்தது. ஆனால் அந்த ஆண்டு எனது வருகையுடன், அந்தக் கணிப்பை முற்றிலும் முதிர்ச்சியற்றதாக்கி விடக்கூடிய ஒரு நிகழ்வும் நடந்தது. நாட்டின் மிக சக்திவாய்ந்த பதவியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு ஷி ஜின்பிங் நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக உலகளாவிய வர்த்தக முறைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம், சீனாவையும் மாற்றியுள்ளது என்பதில் ஐயமில்லை. அது, பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைச் சூறாவளியாகக் கட்டவிழ்த்து விட்டது. அதனால், ஜனநாயகம் குறித்த எதிர்பார்ப்புகள் முன்னெப்போதையும் விட எட்டாக் கனியாக ஆகிவிட்டன. சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் கட்டுப்பாட்டை இறுக்கமாக்குவதற்கு சீனாவின் ஏற்கனவே கடுமையான அரசியல் அமைப்பை அதிபர் ஷி பயன்படுத்தியுள்ளார். தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ள இவரது ஆட்சியின் பத்தாண்டுகளில், ஊடகத் தளம் போர்க்களமாக உருவெடுத்துள்ளது.
 
சீனா
பட மூலாதாரம்,TWITTER
"ஆவண எண் 9" - இது ஒரு உயர் மட்டக் கசிவாகக் கருதப்படுகிறது - இதில், இந்தப் போரின் முக்கிய இலக்குகளாகக் கண்டறியப்பட்டது, பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட மேற்கத்திய விழுமியங்கள்தான். ஷின்ஜியாங்கின் நிலைமை குறித்த உண்மைகளை அம்பலப்படுத்து அல்லது கொரோனா வைரசின் தோற்றம், சீனா அதைக் கையாளும் விதம் குறித்து கேள்வி எழுப்புவது அல்லது ஹாங்காங்கிற்கான அதன் சர்வாதிகார திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு குரல் கொடுப்பது ஆகியவற்றை செய்யும் எந்த ஒரு அயல் நாட்டு ஊடகமும் முக்கிய இலக்காகியிருப்பதை பிபிசி-யின் இந்த அனுபவம் உணர்த்துகிறது.
 
ஜனநாயக விவாதத்தின் முரண்பாடுகள்
ஆனால் நான் வெளியேறியதை அடுத்து சீனாவின் பிரசாரத் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், செய்தியை ஊதிப் பெரிதாக்க, வெளிநாட்டு சமூக ஊடக தளங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.சீனாவில் வெளிநாட்டு ஊடகங்களுக்கான இடம் குறைந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாடுகளில் தனது ஊடக வியூகத்தில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. தடையற்ற ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி இது செய்யப்படுவது தான் முரண்பாடு. சீனாவின் போர்வீரர்களாகச் செயல்படும் இராஜீய அதிகாரிகள், அயல் நாட்டுச் செய்தியாளர்கள் குறித்த தங்கள் கோபமான ட்வீட்டுகள் மூலம் சூறாவளியை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், தங்கள் சொந்த குடிமக்கள், அதே வெளிநாட்டுத் தளங்களைப் பார்க்கத் தடை விதிக்கிறது சீனா. ஆஸ்திரேலிய தந்திரோபாய கொள்கை நிறுவனத்தின் சர்வதேச சைபர் கொள்கை மையத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்துகளைத் தடையின்றி, அயல் நாடுகளில் வெளியிடுகிறார்கள். ஆனால் உள்நாட்டில் சுதந்தரமான செய்திகளைக் கடுமையாக முடக்கி வைத்துள்ளார்கள். வெளிநாட்டு ஒளிபரப்புகளையும் வலைத்தளங்களையும் சீனா தணிக்கை செய்கிறது மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைத் தன் சொந்த சமூக ஊடக வலைப்பின்னல்களில் பதிவிடுவதிலிருந்து சீனா தடை செய்கிறது.இந்தச் சூழலில், கருத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ந்து வரும் மற்றும் மிகவும் சமச்சீரற்ற போரின் ஒரு சிறிய பகுதியாகவே நான் வெளியேறியது கருதப்படலாம். நல்ல, துல்லியமான தகவல்களின் தடையற்ற பரவலுக்கு இது உதவப்போவதில்லை. செய்திப் பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது, சீனாவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான நமது திறனைக் குறைக்க வழிவகுக்கும். அதே நேரத்தில், எல்லா இடங்களிலும் ஜனநாயக விவாதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த ஒரு சுதந்திர ஊடக வெளியைப் பயன்படுத்துகிறது சீனா.
 
உண்மையத் தேடும் பாதை
சீனா
எழுந்துள்ள கேள்விகளுக்கு விடைகளில்லாத நிலையில், அதிபர் புஷ்ஷின் கணிப்பின் இலட்சிமும் பழங்கஞ்சியாகிவிட்ட நிலையில், நம்பிக்கை ஒளி மெல்லிய கீற்றாகவே உள்ளது. ஷின்ஜியாங்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து சமீபத்திய ஆண்டுகளில் வெளிவந்த பெரும்பாலான தகவல்கள் - சீனா அவற்றைப் "போலி" என்று நிராகரித்த போதிலும் - அதன் சொந்த உள் நாட்டு ஆவணங்கள் மற்றும் பிரச்சார செய்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.கூட்டமாக மக்கள் ஒடுக்கப்படும் ஒரு அமைப்பில், ஒரு நவீன, டிஜிட்டல் வல்லரசு தனது தடயத்தை இணைய வெளியில் விட்டுச் செல்வதைத் தவிர்க்க முடியாது. அவற்றை வெளிக்கொணர ஊடகங்கள் எடுக்கும் முயற்சிகளும் தொலைதூரத்திலிருந்தும் தொடரும். சீனாவின் கதையை தைபே, அல்லது ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பிற நகரங்களிலிருந்து சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வெளிநாட்டு நிருபர்களின் எண்ணிக்கையில் நானும் இணைகிறேன்.
 
வீகர் முஸ்லிம்களுக்கு முகாம்களில் கொடுமை: சீனா மீது தடை விதித்த அமெரிக்கா, ஐரோப்பா
"ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது" - தனியார் நிறுவனத்தை எச்சரிக்கும் சீனா
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், சீனாவில் உள்ள வெளிநாட்டு பத்திரிகைப் படைகளைச் சேர்ந்த துணிச்சலான, உறுதியான உறுப்பினர்கள் உண்மையை வெளிக்கொணர உறுதி பூண்டுள்ளனர். மிக குறிப்பிடத்தக்க வகையில், அரசியல் கட்டுப்பாடுகளின் அழுத்தங்களுக்கு ஆளாகி, தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டு இருந்தும் கூட, ஒரு சில சீனக் குடிமக்கள் தங்கள் நாடு குறித்த உண்மைகளை உரக்கக் கூறத் தயாராகவே உள்ளனர். வுஹான் பொது முடக்கத்தின் ஆரம்ப நாட்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றில் பெரும்பாலானவை இந்த குடிமக்கள் பத்திரிகையாளர்களிடமிருந்து தான் வந்தன. அவர்கள் இன்று அந்த துணிச்சலுக்கான விலையைச் செலுத்தி வருகிறார்கள்.பெய்ஜிங் விமான நிலையத்தின் புறப்படும் தளத்தில், சாதாரண உடையில் இருக்கும் காவல் துறையினரை விட்டுப் புறப்பட என்னால் முடிகிறது.
 
கருத்துகளுக்கான புதிய உலகளாவிய போரில், உண்மையைச் சொல்வதற்கான மிகப்பெரிய ஆபத்துக்களைத் தொடர்ந்து எதிர்கொள்வது சீனாவின் குடிமக்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புதிய நிலம்…வீடு…பிரபல தொழிலதிபர் ஏற்பாடு !