Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

Advertiesment
Stalin

Prasanth Karthick

, திங்கள், 28 ஏப்ரல் 2025 (10:41 IST)

அரசு ஊழியர்களிக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

 

தமிழக சட்டமன்றத்தில் இன்று அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

 

அதன்படி, ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.

 

அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே அமல்படுத்தப்படுகிறது.

 

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும்

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு, பண்டிகைக்கால முன்பனம் ரூ.20 ஆயிரமாக உயர்வு

 

அரசு ஊழியர்களின் பிள்ளைகளின் தொழிற்கல்விக்கு கல்வி முன்பணமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். கலை அறிவியல் படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும்.

 

பொங்கல் பரிசுத்தொகை ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தபடும்.

 

பெண் ஊழியர்களின் மகப்பெரு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

 

மேலும், அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமித்த குழு செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும். இந்த குழு மூன்று வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!