கரூரில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டுகள் திடீரென நிறுத்தப்பட்டதாகவும் ரெய்டு செய்ய வந்த அதிகாரிகள் கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் வீடு உள்பட ஒரு சில இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துவதற்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஒரு வருமானவரித்துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டுகள் நிறுத்தப்பட்டதாகவும் 8 வாகனங்களில் வந்த அதிகாரிகள் கரூர் எஸ் பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஐடி ரெய்டுக்கு வந்த அதிகாரிகள், ரெய்டை நிறுத்திவிட்டு காவல்துறை அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது