Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'புரொபஷனல் கூரியர்' அலுவலகங்களில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு

Advertiesment
Courier
, வெள்ளி, 6 ஜனவரி 2023 (12:08 IST)
'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்தின் தலைமை அலுவலகமான சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்திலும் சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்தநிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சென்னை மண்ணடி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் 'புரொபஷனல் கூரியர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
 
இந்நிலையில் இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து செய்தி வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர்கள் சிங்கிளாக திரிவதற்கு பாஜகவே காரணம்!? – சரத்பவார் குற்றச்சாட்டு!