தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீர் திடீரென வருமான வரித்துறையினர் பிரபலங்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததாகவும் அவரது வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் மூன்று கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அமைச்சர் எம் சி சம்பத் அவர்களின் உறவினர் இளங்கோவன் என்பவரது வீட்டில் திடீரென நேற்று வருமானவரித் துறையினர் ரெய்டு செய்தனர்., அமைச்சர் சம்பத்தின் சம்பந்தியான இளங்கோவன் அவர்களின் சென்னை உள்ள வீடு அலுவலகம் ஆகியவற்றில் நடந்த சோதனையில் ரூ 6 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் சோதனையின் முடிவில் தான் மொத்தம் எத்தனை கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது
எதிர்க்கட்சியினர்களின் வீடுகளில் மட்டுமே வருமானவரித்துறை சோதனை செய்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே சோதனை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது