Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்க்ரீன்; கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்க்ரீன்; கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!
, ஞாயிறு, 28 மார்ச் 2021 (08:17 IST)
எகிப்தின் சூயஸ் கால்வியில் எவர்க்ரீன் என்ற சரக்கு கப்பல் சிக்கியுள்ள நிலையில் அதில் பணிபுரிந்த அனைவரும் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கு இடையே போக்குவரத்துக்கு பெரும் பாலமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கால்வாய் வழியே பயணித்த எவர்க்ரீன் என்ற சரக்குக்கப்பல் கால்வாயின் குறுக்கே கிடைமட்டமாக சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பல் சிக்கிய பகுதிகளில் மணலை தோண்டி ஆழப்படுத்தி பின்னர் இழுவை படகுகளை கொண்டு கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த கப்பலில் பணிபுரிந்த 25 பணியாளர்களும் இந்தியர்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு: ஊரடங்கை மீறினால் கடும் அபராதம்!